டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடாலடியாக வைக்கப்பட்ட ஆப்பு.! விதிக்கப்பட்ட அபராத தொகை.!! பணத்தின் மதிப்பை அறிந்தீர்கள் என்றால்., தலையே சுத்திரும்.!! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் இருக்கும் முகநூல் மற்றும் வாட்சப் வலைத்தளங்கள் வெளியான நாட்களில் அதிகளவில் மக்களால் உபயோகம் செய்யப்பட்டது. இந்த செயலிகளை அடுத்தபடியாக பல செயலிகள் உருவாக்கப்பட்டாலும்., தற்போது சுமார் 100 கோடி நபர்களுக்கு அதிகமான பதிவிறக்கத்தை பெற்றுள்ளது. 

சீனாவில் இருக்கும் பைட்டன்ஸ் நிறுவனமானது முகநூல் செயலுக்கு கடும் போட்டியாக அமைந்தது. இதே போன்று இருக்கும் வீடியோ சார்ந்த செயலிகளான ஸ்னாப்ஷாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பின் தங்கியுள்ளது. 100 கோடி நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலியின் மூலமாக பல்வேறு மொழிகளும் அடக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை தொடர்ந்து புதிய நபர்கள் அதிகளவில் உபயோகம் செய்து வரும் நிலையில்., மேலும் இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த டிக் டாக் செயலியை சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக டவர் ஸ்டோர் எனும் செயலி தகவல் சேவை மூலம் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் கடந்த 2018 ம் வருடம் வரை சுமார் 66.3 கோடி நபர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததாகவும்., அதே வருடத்தில் முகநூலை 71.1 கோடி நபர்கள் பதிவிறக்கம் செய்ததாகவும்., இன்ஸ்டாகிராம் செயலியை 44.4 கோடி நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. 

இந்த செயலி 2018 ம் வருடத்தில் பிரபலமாகி அதிகளவில் பதிவிறக்கத்தை பெற்று சுமார் நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது என்றும்., கூகுளின் பிளே ஸ்டோர் பக்கத்தில் மூன்றாவது இடத்தையும்., அமெரிக்க நாட்டில் விளையாட்டு அல்லாத பதிவிறக்கத்தில் முதல் இடத்தையும் தக்க வைத்துள்ளது. இந்நிலையில்., அமெரிக்காவில் இந்த செயலி 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இருந்த தகவலை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 65 இலட்சம் நபர்கள் அதாவது 13 வயதிற்கும் குறைவான நபர்கள் இந்த செயலியை உபயோகம் செய்த போது., குழந்தைகளின் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் தகவலை பெற்றதால்., இந்த நிறுவனத்திற்கு (40.46 கோடி - இந்திய மதிப்பில்) 57 இலட்சம் டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனை ஏற்ற இந்நிறுவனம் அபராத தொகையை வழங்க ஒப்புக்கொண்டது. இது குறித்து நீதிகள் தெரிவித்ததாவது., அனைத்து இளைஞர்களும் உபயோகம் செய்யும் இந்த செயலுக்கு பதிலாக அமெரிக்காவில்., குழந்தைகளுக்கென்று தனி செயலியை உருவாக்கி தர வேண்டும் என்றும்., அதன் மூலமாக 13 வயதிற்கு உட்பட்ட நபர்கள் செயலியை உபயோக படுத்தினால் அவர்களின் தகவலானது பகிர்ந்துகொள்ள முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america tic tok application company get fine amount


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal