உலகில் உள்ள இந்தியர்களையே பெருமை கொள்ள வைத்த அபிநந்தனிடம் இதை நீங்கள் கவனித்தீர்களா?! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தற்பொழுது பலர் பிரார்த்தனை செய்தது போல பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளார். 

அவர் பாகிஸ்தான் மண்ணில் செய்த ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தைகளையும் நாம் உற்று கவனித்தால் நமக்கு பல விஷயங்களை அவர் கற்று கொடுத்துள்ளார். என வாட்சப்பில் ஒரு தொகுப்பு பரவி வருகின்றது. அவை பின்வருமாறு:-

விமானம்  சுடப்பட்டவுடன்  தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் ஆக்கிரமிப்பு காரணமாக பாகிஸ்தான்குள் இறங்கினார். அதேபோலத்தான் பாகிஸ்தான் விமானியும், காஷ்மீருக்குள் இறங்கினார்..

இவரை   பாகிஸ்தான்  பொதுமக்கள்  பிடித்து விட்டனர், அடித்தும்   துன்புறுத்தினர், அந்த  மூன்று  வீடியோ  நானும் பார்த்தேன் ...

எத்தனையோ புத்தகங்கள்  படித்து  கற்றுக்கொள்ளும்  அனுபவத்தை நமது அபிநந்தன் மூன்றே மூன்று விடீயோக்களில் சொல்லிவிட்டார்.

எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படக்கூடாது எதையும், எளிதாக கையாள பழகிக்கொள்ளவேண்டும். கடுமையான  சூழலில் அமைதியாக இருக்கவேண்டும் (தரையிறங்கிய பின்ன பாகிஸ்தானியர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும்போதும் கூட ), 

அதேபோல்  எதிரிகளுக்கு என்ன விஷயம் தெரியவேண்டுமா(பெயர் வேலை எங்கள், வந்த இடம்) அதை மட்டும் கூறுவது மற்றும் என்ன விஷயம் தெரியக்கூடாதோ அதை சொல்லாமல் இருப்பது (பணியின், தன்மை திட்டங்கள், ராணுவ ரகசியங்கள்) என்று பல விஷயங்களை நமக்கு புரியவைத்துவிட்டார் இந்த மாவீரன்.

வாழ்ந்ததால் இந்த மாவீரனை போல மக்கள் வாழவேண்டும். ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பிறகும் எந்த ஒரு பயமுமின்றி தைரியமாக துணிவாக இப்படி பேசவேண்டுமென்றால் அவர் வாழ்வில் எத்தனை அனுபவங்களை பெற்றிருப்பார் எத்தனை எத்தனை பிரின்சிபல்  விஷயங்களை வாழ்வில் வகுத்துக்கொண்டு வாழ்ந்து இருப்பார். 💪

இவர் நிலையில் ராணுவ வீரராக இல்லாமல் சாதாரண மனிதராக நாம் பாகிஸ்தான் ராணுவத்திடம் இது போன்று மாட்டி இருந்தால் நம் மனம் எப்படி இருந்திருக்கும். ஒரே ஒரு நிமிஷம் யோசித்து  பார்க்க வேண்டும்.

நம் கருத்துக்களில் என்னவேண்டுமானாலும் அள்ளி வீசி விட முடியும் ஆனால் குறிப்பிட்ட இக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது உயிரைக் காக்க தடுமாறிப்போய் இருப்போம்.....

கூத்தாடிக்கு பால் ஊத்தும் ரசிகர்  ரசிகைகளே இவரை பார்த்து திருந்துங்கள். உண்மையான ஹீரோ இவர்தான். நீங்க  படத்தில் பார்க்கும்  ஹீரோக்கள் எல்லோரும் வெறும் ஸிரோக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவு செய்து கூத்தாடிகள்  பின்னாடி அணிவகுக்காதீர்கள்.  இளைஞர்களே..

அபிநந்தன் என்ற மாவீரரை போல வாழுவோம். அபிநந்தன் சார் மூலம் நான் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான். இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன் மற்றும் என்வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் மரணம் என்னை ஆட்கொள்ளும் அந்த மரணம் இன்றோ அல்லது பல வருடங்கள் கழித்தோ வரப்போகிறது, 
பிறகு ஏன் அந்த மரணத்தை பார்த்து நான் பயப்படவேண்டும்,  
பிறப்பதே  சாவதற்கு தான் ...   தற்கொலை செய்து கொல்லும் கோழை கூட மரணத்தை பற்றி  பயப்படாத பொழுது  நான்  ஏன் பயப்பட வேண்டும் ...

வாழும் வரை நேர்மையாக வாழ்ந்துவிட்டு மரணம் வரும்போது அதை வீரமாக எதிர்கொள்ளவேண்டும்.. இதையே நம்மை பின்பற்றும்  இளைஞர்களுக்கு  சொல்லி கொடுப்போம் ...

தளபதிஅபிநந்தன் அவர்களே , 
மாவீரன் என்று சொல்வார்கள் நான் பார்த்ததில்லை நேற்று தான் பார்த்தேன் உன் உருவத்தில் எங்களுக்கு  நீ தான் மாவீரன் ..


இவரோடு ஒரே ஒரே  செல்பி  எடுத்து   மற்றவர் கண்ணில் படும் இடத்தில வைக்க வேண்டும் .வருங்கால இந்தியர்கள் யார்யார்னு  கேட்கட்டும்.. 

இளைஞர்களே  , இவர்  சென்னை  வரும் பொழுது , மொத்த இளைஞர்களும்  போக வேண்டும் .  அரசியல் வாதிக்கும்  கூத்தாடிகளுக்கு  கூடும்  கூட்டத்தை  விட 10  மடங்கு  கூடி  வரவேற்க வேண்டும் ..வந்தே மாதரம்" என்பது தான் அந்த தொகுப்பு. 

உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களையும் பெருமை கொள்ள செய்யும் விதமாக அமைந்துள்ள அபிநந்தனின் இந்த செயலை இந்த அளவு உற்று கவனித்து இந்த தொகுப்பு எழுதப்பட்டிருப்பது நமக்கு ஆச்சர்யத்தை தருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If u noticed this from abinandhan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->