#Unistall_Amazon: சர்ச்சையில் சிக்கிய அமேசான்.. இந்து மத விமர்சனங்கள் மட்டும் இனிக்குதா?..! - Seithipunal
Seithipunal


இந்து மதம், இந்து மத தெய்வங்கள் தொடர்பான விமர்சனங்கள் பல நூற்றாண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள், மாற்று மதத்தினர் போன்று பலரால் பல விமர்சனங்களை பெரும் ஒரேயொரு மதமாக இந்து மதம் இருக்கிறது. 

உலகின் பல நகரங்களில் இருந்து பரவிய மதத்தினர், தங்களின் மதத்தினை முன்னிறுத்தி இந்து மதம், இந்து மத தெய்வங்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனத்தை வைத்து வரும் நிலையில், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பல திரைப்படங்களும் வெளியாகி வருகிறது. 

இதனைப்போன்று, இந்தியாவில் சிறுபான்மை மதமாக இருக்கும் மதங்கள் தொடர்பான படங்களை அம்மதத்தினரே எடுத்தாலும், அதனை திரையில் படமாக்க அந்தந்த மாநில அரசுகள் வன்முறையை தூண்டுதல் அல்லது பிற மதத்தினரை புண்படுத்துவது போல காட்சிகள் உள்ளது என தடை விதித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக வாழ்ந்து வரும் இந்துகளுக்கு மட்டும் மனது புண்பட்டால் பிரச்சனை கிடையாது என்பதை போல பல தொடர்கள் இணையத்தில் உலாவி வருகிறது. சில படங்களும் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில், மலையாள மொழியில் தயாரான கிறிஸ்துவ மதம் தொடர்பான படமும், கிறிஸ்துவ மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக தடை செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட முஸ்லீம் மதம் தொடர்பான கதையும், முஸ்லீம்களின் மதத்தை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமேசான் பிரைமில் இந்து மதத்தினை விமர்சனம் செய்து வெளியாகியுள்ள " தாண்டவ் " தொடர் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்று பல கோரிக்கை எழுந்து வந்தது. 

இந்த தொடரை போன்று, அமேசான் நிர்வாகம் இந்து மத அவமதிப்பு தொடர்பான பல சர்ச்சை பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், அமேசானை அலைபேசியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #Unistall_Amazon என்ற ஹாஷ்டேக் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலரும் அமேசான் செயலியை நீக்கம் செய்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.  மேலும், உணர்வுகள், கருத்து சுதந்திரம் என்பது உங்களுக்கு மட்டும் உள்ளதா?. எங்களுக்கும் மனது உள்ளது என்றும் தங்களின் ட்விட்களில் குறிப்பிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu Peoples tweet about Uninstall Amazon Apps due to Tandav Movie Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->