சிறுமிக்கு ஆபாச தகவலை வெளியிட்ட இளைஞர்.. இன்ஸ்டாகிராமில் நடத்த இன்ப லீலைகள்..!  - Seithipunal
Seithipunal


ற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அளவில்லாமல் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் என்று பாலியல் ரீதியான தொல்லைகள் அதிர்க்கரித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமூகவலைத்தளத்தில் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

11 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் நூதனமான முறையில் செக்ஸ் டார்ச்சர் செய்த கொடுமையான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது. உ .பி .யில் உள்ள காஜியாபாதில் 11 வயது சிறுமி ஒருவரை யாரோ ஒருவர்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் ப்ரொபைல் தகவல்களை திருடி போலி கணக்கு தொடங்கி, அதில் ஆபாச கமெண்டுகளையும் ,போஸ்டுகளையும் போட்டு சிறுமியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கினார். 

பின்னர், சில நாள் கழித்து அந்த நபர் இன்ஸ்டாகிராமில் சிறுமியின் போன் நம்பர் மற்றும் வாட்ஸ் அப் நம்பரையும் வெளியிட்டு ,ஆபாச தகவலையும் வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக அந்த சிறுமிக்கு நிறைய ஆபாச போன் அழைப்புகள் வரத்தொடங்கியது. இதனால் மன உளைச்சலுக்காளான சிறுமி பள்ளி , டியூஷன் போன்றவற்றுக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி இருந்திருக்கிறார். இதை அறிந்த சிறுமியின் தாயார், சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை வலை தளத்தில் வலை வீசி தேடி வருகிறார்கள் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl abused in instagram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->