இரவு நேரத்தில் நிகழும் விசித்திரம்...  இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


டல் எடை அதிகரிப்பதால் சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் சிறுவயதில்லையே தாக்கும் வாய்ப்பு பெரிதளவாக இருக்கிறது.  இந்த நிலையில் மக்கள் தினசரி அதிகாலையில் அவர்களது உடலை உற்சாகத்துடன் வைத்து கொள்வதற்காக உடற் பயிற்சி செய்ய அரசு ஆங்காங்கே பூங்காக்கள் அமைத்துள்ளது. 

இந்த நிலையில் ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி செய்யும் கருவிகள் இரவு நேரத்தில் தானாக இயங்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பேய்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன என்று இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் அவரது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது.

இதை தொடர்ந்து, இந்த பதிவின் கமெண்டுகளில் இது பொய் எனவும் அங்கு பேய் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்கள். மேலும், ஒருவர் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஒரு வீடியோ கட்சியை பதிவிட்டார். அதில் இப்படி தான் அதை ஆட வைத்திருப்பார்கள் தவிர எந்த பேயும் அதில் இல்லை என்று புரியவைத்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ghost exercise video treding


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->