ஆட்சியையே புரட்டிப்போட்ட போராட்டம் - இன்றைய நாளில் நடந்த தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


1926 ஆம் ஆண்டு இதே நாளில் இங்கிலாந்தில்  நடைபெற்ற ஒரே பொதுவேலைநிறுத்தம் தொடங்கியது.

17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்று, 9 நாட்கள் நீடித்த இந்த வேலைநிறுத்தம், ஊதியக் குறைப்பு, பணிநேர நீட்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்றது.

முதல் உலகப்போரின்போது, தங்களது தேவைகளுக்காக, நிலக்கரி ஏற்றுமதியை இங்கிலாந்து குறைத்ததால், அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து நாடுகளில் நிலக்கரித்துறை வளர்ச்சியடைந்தது.

இந்தப்போட்டிகளால், நிலக்கரி ஏற்றுமதி பாதித்து லாபம் குறைந்தது. தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லாத சுரங்க முதலாளிகள், ஏழாண்டுகளில் 35 சதவீதக் கூலியைக் குறைத்திருந்த நிலையில், 1925இல் அப்போது கருவூலத்துறையின் வேந்தராக இருந்த சர்ச்சில், இங்கிலாந்தின் நாணய மதிப்பு, வட்டி விகிதம் ஆகியவற்றை உயர்த்தியது இறக்குமதியை மேலும் சரியச்செய்தது. மேலும் கூலியை குறைக்கவும், பணிநேரத்தை நீட்டிக்கவும் சுரங்க முதலாளிகள் முயற்சித்ததை சுரங்கத் தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்கவில்லை.

அவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்க காங்கிரஸ் களமிறங்குவதாக அறிவித்தவுடன் தலையிட்ட இங்கிலாந்து அரசு, ஊதியத்தைக் குறைக்காமலிருக்க சுரங்கங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு மானியம் அளிப்பதாக அறிவித்தது.

இந்த ஒன்பது மாதங்களில், விநியோகங்களைப் பராமரிப்பதற்கான அமைப்பு என்பதை உருவாக்கி, அனைத்துத் துறைகளிலும் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டிக்கொண்ட அரசு, மானியம் நிறுத்தப்படுவதாகவும், ஊதியம் 13.5 சதவீதம் குறைக்கப்படுமென்றும் அறிவித்தது.

இதனால் மே 4க்கு ஒரு நிமிடம் முன்னதாக, மே 3 நள்ளிரவில் தொடங்கிய வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கக் காங்கிரசே எதிர்பாராத அளவுக்கு போக்குவரத்து, ரயில்வே, அச்சகம் என்று அனைத்து துறைத் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை அரசு ஏற்காமல் ஏற்கெனவே திரட்டிவைத்திருந்த தன்னார்வத் தொண்டர்களைக்கொண்டு போக்குவரத்து முதலான அத்தியாவசியச் சேவைகளைப் படிப்படியாகச் செயல்படுத்தத் தொடங்கியது.

வேறுவழியின்றி மே 12 அன்று வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியல் செய்வதையும், பிறதுறைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்வதையும் தொழிற்சங்க உரிமைகளல்ல என்று 1927இல் இங்கிலாந்து அரசு தடைசெய்தது.

ஆனாலும், 1929 பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய வெற்றிபெற இந்த வேலைநிறுத்தம் காரணமாகியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first general strike England may 4


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->