தப்பி தவறியும் கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்.!   - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் இணையம் பயன்படுத்தாதவர்களே பார்ப்பது மிகக் கடினமாகத் தான் இருக்கின்றது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஒருபுறம் நன்மை கொடுத்தாலும்,பல சிக்கலையும் கொடுக்கத்தான் செய்கின்றது. 

நமக்கு ஒரு சந்தேகம் அல்லது தேவை என்றால் உடனடியாக கூகுளில் தான் அதனை தேடுவோம். சில விஷயங்கள் நமக்கே ஆபத்தாக முடியும், கூகுளில் எதையெல்லாம் தேட கூடாது என்பதை இங்கே காணலாம்.

ஆன்லைன் பேங்கிங்:

நெட் பேங்கிங் லாகின் செய்ய பலரும் தங்களது வங்கி பெயரை கூகிளில் தேடி அதன் மூலமாக உள்ளே செல்ல முயற்சிப்பார்கள். அப்படி நீங்கள் தேடும் போது உங்கள் இணைய முகவரி போலவே இருக்கும் போலியான முகவரிகளை காண்பித்து உங்கள் கடவுச்சொல்லை திருட வாய்ப்பு இருக்கின்றது.

கஸ்டமர் கேர் எண்கள்: இணையத்தில் தேட கூடாது என்பதில் மிக முக்கியமான விஷயம் இதுதான். பல நேரங்களில் போலியான கஸ்டமர் கேர் எண்களை கொடுத்து அதில் நம்மிடமே ஏமாற்று வேலைகள் மோசடிகள் நடத்த வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

play store, seithipunal

ஆப்ஸ்: உங்கள் கணினி அல்லது தொலைபேசி மூலம் ஆப்களை அதற்கான இடங்களில் தேடி தரவிறக்கம் செய்வது தான் நல்லது. உதாரணத்திற்கு ஆண்ட்ராய்டு போன்க்கு தேவைப்படும் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் தான் தேட வேண்டும். கூகுளில் தேடப்படும் போலியான ஆப்களை தரவிறக்கம் செய்தால் அதன்மூலம் சிக்கல்களை ஏற்படுத்தும்.

மேலும் சில ஆப் களின் மூலம் உங்களது மொபைல் போனில் இருக்கும் தரவுகளை திருடவும் வாய்ப்பிருக்கின்றது.

வியாதி மற்றும் வியாதிக்கான அறிகுறி: இது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம். நமது உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை கூகிள் செய்து தேடி பலரும் அச்சம் கொள்கின்றனர். இது குறித்து மருத்துவரிடம் நீங்கள் கூறினால் உடனடியாக மருத்துவர் கோபப்படுவார்கள்.

அதில் போடப்பட்டிருக்கும் அறிகுறிகளை வைத்து ஆன்லைன் மூலம் மருந்து வாங்குவது மிகவும் தவறு.

சமூக வலைத்தளங்கள்: உங்கள் சமூக வலை தளங்களின் கணக்குகளை நீங்கள் நேரடியாக அப்பிளிகேஷன்ஸ் மூலம் உள்ளே செல்வதுதான் நல்லது. போலியான முகவரிகள் மூலம் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்ய வாய்ப்புகள் இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont search this in google


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->