ஃபேஸ்புக்கில் குடும்ப போட்டோ போட வேண்டாம்... மாஜிஸ்திரேட் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


ஃபேஸ்புக்கில் குடும்ப போட்டோ போட வேண்டாம், சில விஷமிகள் அதை மார்பிங் செய்து தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக சட்ட விழிப்புணர்வு முகாமில் மாஜிஸ்திரேட் விஜயகுமார் எச்சரித்தார்.

சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜயகுமார் பேசியதாவது:-

மாணவிகள் பள்ளிக்கு வரும்போது வீடு திரும்பும்போதும் தங்களுக்கு ஒரு சிலரால் ஏற்படும் பிரச்சனைகளை 99% பேர் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் சொல்வது இல்லை. 

அவர்களின் மன ரீதியிலான பிரச்சினைகள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தால் அவர்கள் கவுன்சிலிங் வழங்குவார். 1 முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்ததால் தூக்கு தண்டனையும், 12 முதல் 16 வயது வரையான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனையும், 17 முதல் 18 வரை உள்ள இளம் பெண்களிடம் பாலியல் ஈடுபட்டால் 20 வருடம் தண்டனையும் வழங்கப்படும்.

மேலும் நீங்கள் செல்போனை பயன்படுத்தும் போது அதன் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்தளத்தில் உங்களது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவிட கூடாது என்று கூறினார். 

ஏனெனில் அந்த போட்டோக்களை ஒரு சிலர் மார்ஃபிங் செய்து தவறாக பயன்படுத்தக் கூடும் என்று எச்சரித்தார். தற்போது நான் பேசியது என்ன என்பதை நீங்கள் ஒரு போஸ்ட் கார்டில் எழுதி எனது முகவரிக்கு அனுப்புங்கள், அதில் மூணு பேரை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்று நீதிபதி விஜயகுமார் கூறினார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not post images on facebook


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->