234 தொகுதியிலும் திமுகவின் தில்லாலங்கடி வேலை என்ன?.. கூட்டணி கட்சிகளுக்கு பல்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் நிர்வாகிகளை முழுவீச்சு களப்பணியில் இறக்கி விட்டுள்ளனர். மேலும், கட்சியின் தலைமை சார்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் அதிமுகவின் கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய தமிழகம் மற்றும் பல சிறிய கட்சிகள் இடம்பெற்று இருந்தது. திமுக கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல், தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதி உட்பட 39 தொகுதியிலும் அமோக வெற்றியை பெற்று இருந்தது. 

தற்போது சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா? என்ற கேள்விகளுக்கு இன்னும் சில மாதங்களில் அதிகாரபூர்வ பதில் கிடைக்கும். இந்த தேர்தலில் திமுக 234 தொகுதியிலும் தனது கட்சியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டிய சூழல் இருந்தாலும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை, தனது கட்சியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளது.

இந்த பாணியை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே திமுக கையில் எடுத்திருந்தது. இருப்பினும் திமுக கட்சியின் சின்னம் இல்லாமல் போட்டியிட்ட இடத்தில் எதிர்பார்த்த அளவு வாக்குகள் வரவில்லை என்பதால், இந்த தேர்தலில் அதனை சேர்த்து ஈர்க்கும் பொருட்டு இம்முடிவை திமுக கையில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.. 

தமிழகத்தில் பிரதான கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று திமுகவின் முதுகில் சவாரி செய்து வருவதாக திமுகவின் ஒரு முக்கிய புள்ளி சொல்லியதன் விளைவு தான் திமுக இன்று இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

அதே சமயத்தில், திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் பொருட்டு தங்களது கட்சியின் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது, அனைத்து விதமான பிரச்சனைகளையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Plan to Tamilnadu Assembly Election 2021 give DMK Logo for Alliance Parties


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->