சாதி ஓட்டிற்காக அமைதிகாக்கும் திமுக.. சமத்துவத்தை காற்றில் பறக்கவிட்ட ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரை, கடந்த 2016 ஆம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் கணவர் சங்கரை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர். இதில் கவுசல்யா வெட்டு காயத்துடன் தப்பினார்.  ஆனால், காயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா, கணவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், கடந்த 2017 ஆம் வருடத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட எட்டு பேரும் குற்றவாளிகள் எனவும், தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார். மீதமுள்ள ஆறுபேருக்கு தூக்கு தணடனையும் விதித்து உத்தரவிட்டார்.

கவுசல்யாவை சில வருடங்கள் கழித்து பறையிசை குழுவுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை மாற்றி கட்டமைத்துக்கொண்டார். உயிராக காதலித்த காதல் கணவரை இழந்து, பறையிசை குழு சக்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் சக்தி தொடர்பான பல தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று உடுமலை சங்கர் கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதிற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்து அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள ஐவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கௌசல்யா மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்த நிலையில், பல கட்சிகளின் சார்பாக இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளும் விடப்பட்டது. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இதுவரை எந்த அறிக்கையும் வந்ததாக தெரியவில்லை. கௌசல்யாவும், சங்கரும் மாற்று சமூகத்தினராக இருந்த நிலையில், இருவரும் கௌசல்யாவின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து, இதனால் கொலையும் நடந்தது. இந்த கொலை நடைபெற்ற சமயத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு, கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், கௌசல்யாவின் பிற்கால வாழ்க்கை திமுக மற்றும் பெரியார் கொள்கைகளோடு மாற்றி இணைக்கப்பட்டு நிம்மதியை துளைத்த வாழ்க்கையை ஏற்க வைத்தது. சில நாட்கள் சிரிப்பு பழக்கம் தெருவில் தான் நிறுத்தும் என்பதை போல, இரண்டாவது திருமணம் முடிந்து, கணவரின் பல விஸ்வரூபம் தெரியவந்தது. 

மேலும், தென் மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் சமூகத்தை சார்ந்த கௌசல்யா, தற்போது உள்ள சூழ்நிலையில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் இருக்கும் திமுகவிற்கு அனைத்துவிதமான வாக்குகளும் தேவை என்பதாலும், சங்கர் வழக்கு தொடர்பான விவகாரத்தில் திமுக தலையிடும் பட்சத்தில், தென் மாவட்டத்தில் பெரும் வாக்கு வங்கியை வைத்துள்ள சமூகத்தின் வாக்குகளை பாதிக்கும் என்ற காரணத்தால், திமுக இந்த மேல்முறையீடு மற்றும் சங்கர் தீர்ப்பு விவகாரத்தில் அறிக்கையோ அல்லது கண்டனம் பதிவு செய்யாமல் இருக்கிறது என்று தெரியவருகிறது. இதனை போன்று சமூக நீதிக்கான கட்சி என்று கூறும் திமுக பாதிக்கபட்டவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில், இதனை வைத்து அரசியல் செய்யும் பொருட்டு கண்டனங்களையும், அறிக்கையையும், பல வசனங்களையும் பேசி பேட்டியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ இருக்கும் பட்சத்தில், எந்த விதமான கண்டன அறிக்கையை தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. ஓட்டுக்கு மற்றும் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்ளும் திமுக, வாக்குகளைப் பெற்ற உடன் கடவுளும் இல்லை, ஒன்றும் இல்லை... கடவுள் எல்லாம் வெறும் கற்கள் தான் என்று பேசுவது போல இந்த விஷயத்திலும் செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்..

மேலும், சாதி கடந்த திருமணத்தில் கொலை ஏதும் நடந்துவிட்டால் மட்டும் தலையில் அடித்து ஓடி வரும் போராளிகள், சமத்துவவாதிகள், நடுநிலை வாதிகள், பிற அரசியல் கட்சியினர் என அனைவரும், இதே காதல் திருமணங்களில் ஆறு மாதத்தில், மூன்று மாதத்தில் மனைவி அடித்து கொலை, மற்றொரு திருமணம் என்று காமுகன் நாடக காதலால் பெண்களை ஏமாற்றி இச்சைக்காக பயன்படுத்தி கொடூர கொலைகளையும் செய்த சமயத்தில் எந்த விதமான அரசியல் கட்சியும் எவ்வித அறிக்கையும், கண்டனும் தெரிவிப்பது இல்லை.. ஏன் பல செய்திகள் கூட துண்டு செய்திகளாக தான் வெளியாகிறது. உயிருக்காக போராடும் நபர்கள் என்றால், சமத்துவத்தோடு போராடுவதே நல்வழிக்கு வழிவகை செய்யும்.. மாறாக உயிரிலும் சாதியை பார்த்து அரசியல் செய்துவிட்டு, குரல் கொடுத்து போராடுவது, மற்றொரு கொலை விவகாரத்தில் மவுனம் காப்பது இன்னும் பல பெரிய பிரச்சனைகளுக்கே வழிவகை செய்யும் என்பதே நிதர்சனம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Fraud Equality in Tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->