உல்ட்டா சம்பவத்தில் உலகமகா சம்பவம் செய்யும் திமுக.. அது வேற வாயி.. இது......!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க கட்சியும், ஆட்சியை பிடிக்க தி.மு.கவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க தலைநகரம் வடிவேல் காமெடி போல, " நானும் ரவுடி தான் " என்ற பாணியில், தனியாக போட்டியிடவும் தயங்கமாட்டோம் என்பதை போல பேசி வருகின்றனர். 

இந்நிலையில், அரசியலில் உள்ள பரபரப்பு என்பது கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி இருந்தாலும், சில விஷயங்களை வைத்து வாக்குகளை தன்வசப்படுத்தி திமுக கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக இப்போதே பல விஷயங்களை செய்து வரும் நிலையில், சென்ற நாடாளுமன்ற தேர்தல் ஆன்லைன் விளம்பர யுக்தியை களமிறக்கி வருகிறது. 

இதில், தி.மு.கவின் பல முன்னணி நட்சத்திரங்கள் அரசியல் விளையாட்டுகளை ஆட துவங்கி, நிர்வாகிகளை பலப்படுத்தி வரும் நிலையில், திமுக தலைமையும் ஸ்டாலின், உதயநிதி என அடுத்தடுத்து அரசியலில் பல பரபரப்பு விஷயங்களை செய்து வருகிறது. 

தி.மு.கவின் உல்ட்டா வேலை இன்று இணையத்தில் பெரும் வைரலாகி கவனிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க தலைவராக இருந்து வரும் ஸ்டாலின், கடந்த சில வாரத்திற்கு முன்னதாக பதிவு செய்த ட்விட்டில், அரசு அரியர் வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சி பெறவைத்து அறிவித்த சமயத்தில், பணம் கெட்டாத நபர்களையும் தேர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த விஷயத்தில், ஸ்டாலின் 50 வருட அரசியல் சாணக்கியன் போல, அதிமுக அரசை அடிமை அரசு என்றும், அடிமை ஆட்சி என்றும் விமர்சனம் செய்து வருகிறார். அவர் மீது அரசு மீது அவதூறு பரப்புதல், களங்கம் ஏற்படுத்துவது போன்ற பல வழக்குகள் போடலாம் என்றாலும், அதிமுக மவுனம் காண்பித்து வருகிறது. இந்த மவுனத்திற்கு பின்னணியில் பிற விஷயம் இருக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தற்போது அரியர் விவகாரத்தில் மத்திய அரசு, அண்ணா பல்கலை. கழகம் சார்பாக மாற்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரியர் வைத்தவர்கள் தேர்ச்சிக்கும், பணம் கெட்டாத அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்காகவும் குரல் கொடுத்த திமுக, தமிழக அரசு அறிவிப்பிற்கு பின்னர் திமுகவின் அழுத்தத்தால் தான் அரியர் தேர்வுகளை தேர்ச்சி என்று அரசு அறிவித்ததாக கூறிய உடன்பிறப்புகள் பலே வேலை செய்துள்ளது. 

ஸ்டாலின் வழக்கம்போல ஆக எடப்பாடி அரசு எதனை செய்தாலும் அவசரம், நிர்வாக குளறுபடிகள் என்று அளந்துவிட்டு வருகிறார். நெட்டிசன்கள் வசம் இத்தனை விஷயங்கள் கண்களில் பட்டவுடன், வடிவேல் பாணியில் " அதுவேறவாயி.. இது நாரவாயி " என்று கலாய்க்க துவங்கியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Fake Politics Atrocity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->