சிறுவர்களுக்கு சரக்கை ஊத்திவிட்டு கொண்டாட்டம்.. அதிர்ச்சியூட்டும் பரபரப்பு வீடியோ..! - Seithipunal
Seithipunal


சிறார்கள் மதுபானம் அருந்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்றுள்ள காலகட்டத்தில் மேலைநாட்டு கலாச்சாரம், கெத்து, மரியாதை, பயம் என்ற பெயரில் சிறார்கள், இளைஞர்கள் அதிகளவு மது, போதை, புகை போன்ற பழக்கத்திற்கு அடிமையாவது தொடர்கதையாகியுள்ளது. போதை வஸ்துக்களை உபயோகம் செய்தால் தான் கெத்து என்ற பெயரில் செயல்படும் இளம் சிறார்கள், தங்களின் எதிர்கால வாழ்க்கையை கண்முன்னே இழந்து வருகின்றனர். 

இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, அவை உடலுக்கும், குடும்பத்தின் நலனுக்கும், உயிருக்கும் கேடானது என்று கத்தி கதறினாலும் கேட்க ஆளில்லை என்பதை போல அனைத்தும் நடக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து வீடியோ எங்கு? எப்போது? யாரால்? எடுக்கப்பட்டது என தெரியவில்லை. 

வீடியோவில், இளம் சிறார்கள் சுற்றி நிற்கும் நிலையில், அவர்களுக்கு குவளையில் மதுபானத்தை ஒருவர் ஊற்றிக்கொடுக்கிறார். சிறார்கள் அதனை வாங்கி அருந்துகின்றனர். வீடியோவின் பாதிக்கு மேல் இளம் பிள்ளை ஒருவன், மதுபானத்தை கொடுக்கும் நபரிடம் மதுபானம் கேட்க, அவரும் தனது கையால் அதனை ஊற்றுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், சிறார்கள் குடிப்பது குளிர்பானமாக இருக்க கூடாதா? என மனம் ஏங்குகிறது எனவும் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

"மதுபானம், போதை, புகை பழக்கம் உடல் நலனுக்கும், குடும்ப நலனுக்கும் தீங்கானது., உங்களின் உயிரை பறிக்கும்."

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Children Drinks Liquor Alcohol Video Trending on Social Media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->