ஓ.பி.சிகளுக்கு துரோகம் இழைக்கும் பாஜக.. ஓட்டு மட்டும் இனிக்குதா?..!! - Seithipunal
Seithipunal


ஓ.பி.சி பிரிவினருக்கு மருத்துவ துறையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக பாமக, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகளின் பெயர்களில் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் தொடுக்கப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள், சென்னை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டனர். 

இந்த வழக்கை ஏற்ற சென்னை நீதிமன்றம் மத்திய அரசை பதில் மனுதாக்கல் செய்ய கூறி உத்தரவிட்டது. மத்திய அரசின் பதில் மனுப்படி ஓ.பி.சி பிரிவினருக்கு மிகுந்த ஏமாற்றம் காத்திருந்தது. 27% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காத மத்திய அரசு, இதுதொடர்பாக  உச்சநீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருப்பது காலம் தாழ்த்தும் யுக்தியாகும்.

மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் சார்பில், மருத்துவக் கல்விக்கான உதவித் தலைமை இயக்குனர் மருத்துவர் சீனிவாஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்,  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அகில இந்திய தொகுப்புக்கான இடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டியிருப்பதாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதன்படி நிபந்தனையாக மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது. அதன்படி பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

அவ்வாறு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் போது அகில இந்திய தொகுப்பில் இப்போது நடைமுறையில் உள்ள பொதுப்போட்டிக்கான ஒதுக்கீடு 77.5%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடி  வகுப்பினருக்கு 7.5% இட ஒதுக்கீட்டின்படி எத்தனை இடங்கள் கிடைக்கின்றனவோ, அந்த இடங்கள்  குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒத்துழைப்புடன் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டுமானால், அதற்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்த வேண்டும். அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்  ஒப்புதல் அளிக்குமா? என்பது தெரியாது. இவை அனைத்தும் போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும். இது போன்ற செயல்களில் மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இணையத்தில் குரல் வலுத்து வருகிறது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt injustice for OBC Reservation in Medical college seats


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->