பிக் பாஸ் சாண்டிக்காக ரசிகர்களிடம் மல்லுக்கட்டிய நடிகை..!! - Seithipunal
Seithipunal


நடிகை காஜல் பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் நடன இயக்குநரான சாண்டியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. 

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, பிக்பாஸ் வீட்டில் கவினுடன் மட்டுமெ நெருக்கமாக பழகியுள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் லிஸ்டில் முதல்முறையாக இடம்பிடித்தார் சாண்டி. அப்போது அவருக்கு அதிக வாக்களித்து வெற்றி பெற செய் வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இதனை பார்த்த காஜல் அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் அழகான நட்பு பரவி வருகிறது. உங்கள் வெற்றிக்கு சந்தோஷத்திற்கும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும், லவ் யூ ஆல் என்று டீவீட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டை பார்த்து கடுப்பாகிவிட்டார் காஜல். அந்த நபரிடம் தனது கோபத்தை காட்டும் வகையில், அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதறாத என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

big boss sandy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->