ஆஞ்சநேயரை வணங்குபவர்களை ஏழரை சனி பாதிக்காது. ஏன் தெரியுமா? கண்டிப்பாக இதைப் படிங்க…! - Seithipunal
Seithipunal


 

சனி பகவானைக் கண்டு அஞ்சாதவர்களே உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். அவரின் பிடியில் தெய்வங்களே சிக்கித் தவித்துள்ளனர். கடவுள் முதல் மானிடர் என்னும் மனிதர்கள் வரை, அவரது பிடியில் சிக்காதவர்களே இல்லை.

இப்படி எல்லா கடவுள்களையும், பிடித்துக் கொண்ட சனி பகவான், விநாயகரையும், ஆட்கொள்ள நினைத்து, அவரிடம் சென்றார்.

அவர் வந்திருப்பதன் காரணம் அறிந்த விநாயகப் பெருமான், “சனி பகவானே, நீ இன்று போய் நாளை வா…! என்றார். எனவே, விநாயகரின் வாக்கிற்கு கட்டுப்பட்டு, சனி பகவானும், மறு நாள் வந்தார்.

அவரைக் கண்ட, விநாயகர், “நான் தான் உன்னிடம் சொன்னேனே, இன்று போய் நாளை வா என்று…! உன் காதில் விழவில்லையா? என்றார். சரி, விநாயகர், ஏதோ நினைவில் சொல்லி விட்டார் போலிருக்கிறது. நாளை வருவோம், என்று மறு நாளும் வந்தார்.

மீண்டும் அதே பதிலைச் சொன்னார் விநாயகர். அலைந்தலைந்து வெறுத்துப் போனார் சனி பகவான். சரி, விநாயகரைத் தான் பிடிக்க முடியவில்லை, என்று ஆஞ்சநேயரைப் பிடிப்பதற்காகச் சென்றார்.

ஆஞ்சநேயர், தன் தலைக் கிரீடத்தை எடுத்து வைத்த சமயம் பார்த்து, அவரது தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டார், சனி பகவான்.

உடனே, ஆஞ்சநேயர், பெரிய மலையைப் பெயர்த்தெடுத்து, தன் தலையில் சுமந்து சென்றார். தலையில் இருந்த சனி பகவான், மலையின் அழுத்தத்தைத் தாங்க இயலாமல், அலறினார். “என்னை விட்டு விடுங்கள், என்று மன்றாடினார்.

பின், அவரை விடிவிடித்த ஆஞ்சநேயர், இனி என் பக்தர்கள் யாரையும் துன்புறுத்தக் கூடாது, என்று உத்தரவு பிறப்பித்தார். அதனால் தான், சனிக்கிழமை அன்று, ஆஞ்சநேயர் கோவிலில் அதிக கூட்டம் காணப் படுகிறது. அன்றைய தினத்தில் தான் ஆஞ்சநேயரை அநேகப் பக்தர்கள் வணங்குகின்றனர்.

Madurai Raja

English Summary

Bagwan Anjaneyar's power


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal