பேஸ்புக்கில் பதிவிட்டதற்கு கைது செய்யப்பட்ட இளைஞர்.! அப்படி என்ன பதிவு.?! - Seithipunal
Seithipunal


இணையதள பயன்பாடு அதிகமான நாளிலிருந்து இணைய குற்றங்களும் அதிகரித்து வருகின்றது. பெண்களை அவமதிப்பது அவர்களின் புகைப்படங்களை எடுத்து தகாத முறையில் பயன்படுத்துவது, ஆபாசவலைத்தளங்களில்  பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது என பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றது.

அடுத்ததாக அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களை அவமதிக்கும் விதமாக முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புவது வழக்கம். இதை சில கட்சியினர் தங்களுடைய எதிர்க்கட்சியை அவமானப்படுத்த அல்லது தேர்தல் நேரத்தில் அவதூறை பரப்ப பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை போடச் சொல்வது என மோசமான அரசியல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையில், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும் முகநூலில் சிவா என்பவர் பதிவிட்டிருந்தார். இது குறித்து சர்ச்சை கிளம்பியது. இதன்காரணமாக நாச்சியார்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அக்டோபர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக், முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் பல்வேறு கருத்துக்களும், சர்ச்சைகளும் பதிவிடும் நபர்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arrest for post in facebook


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->