லிஸ்டில் இடம்பிடித்த அனுஷ்கா விராட்.!   - Seithipunal
Seithipunal


ட்விட்டரில் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட பெண் அரசியல்வாதிகளில் ஸ்மிருதிராணி முதலிடம் பிடித்து இருக்கின்றார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு குழுக்கள் என 2019 ஆம் ஆண்டில் மிகவும் விவாதத்திற்கு ஆளானவர்களின் பட்டியலை சமீபத்தில் ட்வீட்டர் நிறுவனம் வெளியிட்டது.

2019 ஆம் ஆண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட பெண் அரசியல்வாதிகளின் பட்டியலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி முதலிடத்திலும், பிரியங்கா காந்தி இரண்டாவது இடத்திலும், மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். 

இதுபோல நான்காவது இடத்தில் பாஜக நிர்மலா சீதாராமன் மற்றும் ஐந்தாவது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிரியங்கா சதுர்வேதி சிவசேனா தலைவர் ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர். முன்னால் ஆம் ஆத்மி எம்எல்ஏவான அல்கா லம்பா ஏழாவது இடத்தில் இருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி எட்டாவது இடத்திலும், முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி 9வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அதிஷி மார்லேனா 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.

பொழுதுபோக்கில் 2019 இல் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பெண்களாக அனுஷ்கா சர்மா, லதா மங்கேஷ்கர், சோனாக்ஷி சின்கா ஆகிய பெண்கள் இடம்பிடித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anushka sharma in twitter famous list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->