விவசாயிகளே வியாபாரியாக களம்காணும் நேரம் இது.. வைரலாகும் விழிப்புணர்வு தன்னம்பிக்கை பதிவு.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள விவசாயிகளுக்கு பிரச்சனையாக நீர் பற்றாக்குறை, விளைவித்த பொருளுக்கு உரிய விலை இல்லாதது போன்ற பல எண்ணிலடங்கா பிரச்சனைகள் இருக்கிறது. இதில், விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் என்ற பெயரில் விவசாய பொருட்களை மிகக்குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் என்ற வழிப்பறி நபர்கள், மக்களிடம் பொருளை கொண்டு சேர்க்கையில் கொள்ளை இலாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். 

அனைவரும் இலாபத்தை நோக்கித்தான் ஓடுகிறோம் என்ற கூற்றை நியாயமாக ஏற்றுக்கொண்டாலும், அதனை தனக்கு மட்டும் நியாயம் என எண்ணுவது எப்படிப்பட்டது?.. விவசாயியிடம் உரிய விலை கொடுத்து வாங்கி வந்து, மக்களிடம் சரியான விலையில் கொண்டு சேர்க்கும் சில வியாபாரிகள் இருந்தாலும், பெரும்பாலான வியாபாரிகள் இலாபத்தை பகல்கொள்ளையடித்து வருவதும் நடந்து வருகிறது. 

கடைக்கு செல்கையில் மளிகை கடைகளில் எதுவுமே பேசாமல், அங்கு பதிவு செய்துள்ள விலையை கொடுத்து காய்கறிகளை வாங்கி வரும் நாம், சாலையோரம் கடைபோட்டுள்ள விவசாயியிடம் உற்பத்தி செலவுக்கு கூட கிடைக்காத வகையில் உள்ள விலையை பேசி அவர்களின் மனதை புண்படுத்துகிறோம். இதில், மளிகைக்கடையில் உள்ள பொருட்களின் தரத்தை கூட பார்க்காமல் கண்மூடித்தனமாக செயல்பட்டுவிட்டு, விவசாயியிடம் அந்த காயில் பூச்சி உள்ளது என்று பகுமானம் எல்லாம் பேசியிருப்போம். இந்நிலையில், ஓர் இளம் விவசாயியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த பதிவில், " ஆயுத பூஜை காலத்தில் வாழை தாரை 1 டன் 8000 ரூபாய்க்கு கூட யாரும் வாங்க முன்வர வில்லை. "மனம் தளரவில்லை"

வெள்ளி கிழமை 1டன் வெட்ட வேண்டியது யாரும் வராத காரணத்தால் நன்கு தேறிய அரை டன் வாழை தாரை மட்டும் வெட்டினேன் எல்லாத்தையும் பழுக்க வைத்தேன். (ஞாயிறு ஆயுத பூஜை).

ஆயுத பூஜை காலை விடியற்காலம் 4 மணிக்கு எந்திருச்சு பார்த்தேன் வாழை தார் அனைத்தும் பழுத்திருந்தது. என் நண்பனின் உதவியால் #பேராவூரணி (தஞ்சாவூர் மாவட்டம்) யில் எனது சொந்த ஊரிலே 4:30AM டாடா ACE ஏற்றி மக்கள் கூடும் இடத்தில் இறக்கினேன். அதன் கூடவே வாழை கட்டையையும் இலையையும் இறக்கினேன்.

நல்ல வியாபாரம் மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாத்தையும் விற்று விட்டேன். கையில் எல்லா செலவும் போக 10,000 இருந்தது. இதில் வாழை தாரோட பங்களிப்பு 9,000 ரூபாய். டன் 8,000 ரூபாய்க்கு வியாபாரிடம் கெஞ்சுனேன் எடுக்க வரல... ஆனால் நான் விவசாயியாக இருந்து விடாமல் வியபாரியாக மாறுனதால அரை டன் வாழையை 9,000 விற்க முடிஞ்சது.

விவசாயி நட்டமடைய சந்தை படுத்த தெரியாததும், மதிப்பினை கூட்டி விற்பனை செய்ய இயலாததும் ஒரு மிகப்பெரிய காரணமே.. இதனைப்போல மாற்றி யோசித்தால் கூடுதல் லாபம் பார்க்கலாம்தானே??? " என்று கூறியுள்ளார். இதனைக்கண்ட பல விவசாயிகளும் தாங்கள் இதனையே முயற்சித்து பார்க்கிறோம் என்று பதில் தெரிவித்து வருகின்றனர். விவசாயி என்றுமே கொள்ளை இலாபம் எதிர்பார்க்காத, குறைந்தபட்ச இலாபம் எதிர்பார்க்கும் நபர்களே. அவர்களிடம் பொருளை வாங்கினால், அவர்களின் மனதார வாழ்த்து நமது தலைமுறையையே காக்கும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture peoples should change marketing plan like Sellers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->