அடம் பிடிக்கும் பாஜக.. சத்தமே இல்லாமல், புதிய ஸ்கெட்ச் போடும் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு இப்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் வியூகத்தை வெளிப்படுத்தி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கக்கட்சியும், எதிர்க்கட்சியும் தயாராகி வருகிறது. 

தற்போதைய கொரோனா பரவல் காரணமாக அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையான பரபரப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், பல சின்ன சின்ன விஷயங்கள் தேர்தல் பரபரப்பை உறுதி செய்கிறது. கொரோனா பரவல் இப்போது இல்லாது இருந்திருந்தால், தமிழக அரசியல் களமே களைகட்டி பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். 

இந்நிலையில், தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்து வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக துவங்கியுள்ளதாக தெரியவருகிறது. 

இதில், அதிமுக தங்களின் தலைமையில் கூட்டணி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழக பாஜக தங்களின் தலைமையில் தான் கூட்டணி என்று உறுதியாக தெரிவிப்பதாக தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுக - பாஜக இடையே உரசல் போக்கு நிகழ்ந்து வருகிறது. 

மேலும், நாடாளுமன்ற தேர்தலிலேயே அதிமுகவிற்கு பாஜக கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல், உள்ளூர் விவகாரத்தில் மத்திய அரசின் நயவஞ்சகத்தால் பெரும் தோல்வி காத்திருந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கும் பாஜக கூட்டணி வேண்டாம் என்று அதிமுகவின் நலன் விரும்பிகள் கருத்து தெரிவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், அதிமுக இந்த விவகாரத்தில் இறுதிக்கட்டத்தில் தான் முடிவு எடுக்கலாம் என்றும், இந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினை கூட்டணியில் இருந்து விலக்கி, மாற்று கூட்டணியை அதிமுக அமைத்தாலும் அதில் சந்தேகத்திற்கு ஒன்றும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Plan to cancel BJP Alliance during Tamilnadu Assembly Election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->