உனக்கு இட்டிலி., புரோட்டா பிடிக்குமா?.! புரோட்டாதான்.!! அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்ற கேள்விக்கு குழந்தை கூறிய சுட்டித்தனமான பதில்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. 

அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் எந்நேரமும்  குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்க சில குழந்தைகள் அவர்களின் அறிவார்ந்த செயல்கள் மற்றும் எண்ணத்தால் மக்களின் மனதை வென்று வருகின்றனர். அவ்வாறு உள்ள சில குழந்தைகளின் நகைச்சுவை மற்றும் நல்ல எண்ணத்தை எதிர்பாராத நேரத்தில் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பெற்றோர்கள் பதிவிடுகின்றனர். 

இது குறித்த வீடியோ பதிவுகள் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் நல்ல எண்ணங்களை பொறுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவில் இணையத்தில் பரவி., அந்த குழந்தைகள் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைத்து., அவர்களின் மனதில் வாழ்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே இது போன்ற குழந்தைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவு வைரலாகியது. அதனை போன்று சங்கமா? சாப்பாடா? என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம்., பசிக்குமுள்ள... என்று தனது சுட்டித்தனத்தால் அதிகளவு மக்களை கவர்ந்ததையும் அறிவோம். 

அந்த வகையில்., தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ காட்சியில் குழந்தையின் தந்தை தனது குழந்தையிடம் உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு அந்த குழந்தை அம்மாப்பாதான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பின்னர் உனக்கு இட்டிலி பிடிக்குமா? பரோட்டா பிடிக்குமா? என்ற கேள்வியை முன்வைக்கவே., எனக்கு புரோட்டாதான் பிடிக்கும் என்று கூறுகிறார். சாப்பாட்டில் இட்லியா? புரோட்டாவா? என்று கேட்டால் புரோட்டா என்று சொல்கிறாய்., அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று மீண்டும் கேட்டதற்கு அம்மப்பாதான் பிடிக்கும் நீ பேசமா இரு என்று தனது தந்தையை அன்பால் கட்டிபோடுகிறது அந்த குழந்தை... இது குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால்., அம்மாவை பிடிக்கும் அப்பாவை பிடிக்கும் என்று கூறி வரும் நிலையில்., எனக்கு அம்மப்பாதான் பிடிக்கும் என்று கூறி தனது அன்பை காட்டியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a cute girl answer her dad with talking about who is your favorite daddy or mummy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->