சந்தேக பிசாசு கணவன்... துடிதுடிக்க... மனைவி செய்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


புழல் அருகே வசித்து வரும் சுரேஷ் என்பவர் விழுப்புரத்தை சேர்ந்த ஆண் அனுஷியா என்ற பெண்ணை ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஒரு திருமண விழாவில் பார்த்து அனுஷ்காவை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறான். சுரேஷ் அதே பகுதியில் இருக்கும் கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அனுசியா பட்டதாரியாக இருப்பதால் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சுரேஷிற்கு அனுசுயாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரை அடித்து உதைத்து கொடுமை செய்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த அனுசுயா கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இது குறித்து தன்னுடைய ஊரைச் சேர்ந்த முரசொலிமாறன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடையிலிருந்து பணி முடித்து திரும்பிய அனுஷியா தூக்க மாத்திரைகளை எடுத்து வந்து கணவருக்கு தெரியாமல் பொடி தோசை மாவில் கலந்து சுரேஷிற்கு கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர் தூங்கிவிட தன்னுடைய நண்பர் முரசொலிமாறனுடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் முரசொலிமாறன் வீட்டை விட்டு வெளியேற அனுசியா எதுவும் தெரியாதது போல் வீட்டிலேயே தூங்கியுள்ளார். பின்னர், விடியலில் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிய வர இதுகுறித்து காவல்துறையின் இடம் செய்தி சென்றது. காவல்துறை விசாரணையில் அதிகமாக மது அருந்தியதால் கணவர் இறந்து இருக்கலாம் எனக் கூறி அனுசுயா நாடகமாடி உள்ளார்.

ஆனால், சுரேஷின் கழுத்தில் லேசான காயம் இருந்ததையடுத்து காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்ட அனுசுயா சரணடைந்தார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife killed husband in puzhal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->