காதலர் தினத்திற்கு ரோஜா வாங்க இருக்கும் காதலர்களின் கவனத்திற்கு!!  - Seithipunal
Seithipunal


பொதுவாகவே பிப்ரவரி மாதம் என்றால் இந்த காதல் செய்பவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. அதிலும் பிப்ரவரி பத்தாம் தேதியில் இருந்து சாக்லேட் டே, ரோஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே என எதையாவது அன்றாடம் இணையத்தில் வைரலாகி விடுவது வழக்கம்.

காதலர் தினத்தில் முக்கிய அங்கமாக திகழ்வது ரோஜாப்பூக்கள் ஆகும். குறிப்பாக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற மலர்கள் தான் காதலை சொல்லும் நிறமாக இருப்பதால் இந்த மலர்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

அதிலும், சிவப்பு நிற கார்னேசன் மலர் காதலை சொல்வதற்கு ஒரு சிறந்த மலர் ஆகும். இதனால் அதற்கு மிகுந்த கிராக்கி உண்டு. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இதுபற்றி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம்," ஓசூரில் விளையும் ராஜாக்களுக்கு உலகெங்கும் நல்ல மவுசு இருக்கிறது. தாஜ்மஹால் எனப்படும் சிவப்பு ரோஜா அரபு நாடுகளில் அதிகம் விற்பனை ஆகிறது. 

2 கோடி ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பனிபொழிவினால் அது பாதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜனவரி 25-ந் தேதி ஏற்றுமதி தொடங்கியது. ஓசூரில் இருந்து மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இவை வெளிநாடுகளுக்கு செல்கின்றன" என அவர் கூறியுள்ளார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special article of lovers day


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal