வாட்ஸப்பில் இப்படி ஒரு செய்தி அனுப்பியதற்கா போலீஸ் தண்டனை.? உஷாரா இருங்க.! - Seithipunal
Seithipunal


divorce,seithipunalசவுதி அரேபியாவில் ஒரு வாட்சாப் செய்தியை அனுப்பிய காரணத்திற்காக பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. 

சவூதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ‘வாட்ஸ் அப்’பில் மோசமான வார்த்தைகளை கொண்டு திட்டும் விதமாக அவரது கணவருக்கு ஒரு மெசேஜை வாட்சாப் மூலமாக அனுப்பியுள்ளார். 

அதாவது அந்த செய்திகளில், தனது முன்னாள் கணவரை, பிசாசு, முரடன் போன்ற வன்மையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். இந்த செய்திகளை பார்த்த அவரது கணவர், மிகவும் ஆத்திரமடைந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். 

பின்னர் இதுகுறித்து, ஜெட்டா நகர குற்றவியல் கோர்ட்டில் அந்த பெண்ணின் அவரது முன்னாள் கணவர்,  வழக்கு தொடுத்தார். 

இதுகுறித்த விசாரணையில் அந்தப் பெண், "தன் குடும்பத்தை திருமணமானபோது கணவர் மிகவும் புண்படுத்தியதாகவும், அதற்கு பழி தீர்க்கும் விதமாக தான் இப்போது தான் அவ்வாறு மோசமான வார்த்தைகளைக் கொண்ட செய்தியை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

அவருக்கு 3 நாள் சிறைத்தண்டனை அளிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punishment for whats app message


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->