மீண்டும் ஒரு திலகவதி.? காதலை ஏற்க மறுத்ததால், பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 31-ஆம் தேதி அந்த வீட்டிற்குள் நுழைந்த கோபிநாத் என்ற இளைஞர் பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். அந்தப் பெண் தீ பற்றியதும் அங்கிருந்து கோபிநாத் தப்பியோடியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 50% இருக்கும் அதிகமாக உடல் காயம் இருந்ததால் பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பல விதமான சிகிச்சை அளித்தபோதும் பலனளிக்காமல் அந்த பெண் இன்று மாலை 3 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் பெரிய அளவிலான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்த இளைஞர் காவல் நிலையத்தில் அவராகவே சரணடைந்துள்ளார். உயிரிழந்த அந்த இளம்பெண்ணை அவர் காதலித்துள்ளார் ஆனால், அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதன், காரணமாக அந்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one side love girl attack


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal