வயது ஆக ஆக, தாம்பத்தியத்தில் பாதிப்பு ஏற்படுமா? நம்மில் பலரின் சந்தேகத்திற்கு இதோ பதில்.!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் பற்றி நாம் திகமாகவே தவறான கருத்துக்களையே தெரிந்து கொண்டுள்ளோம். உண்மையில் தாம்பத்தியம் என்பது ஒரு புனிதமான செயல். இரு உடல், அன்பால் பிணைக்கப்பட்டு, ஒரு உயிர் ஆகி,  ஒரு உயிரை ஈன்றெடுக்கும் நிகழ்வு தான் தாம்பத்தியம்.

முந்தய காலத்தில் இந்த கள்ள காதல் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. காரணம் இந்த உலகுக்கே காதலையும், வீரத்தையும் தமிழனை விட வேறு யாரும் கற்று கொடுத்து இருக்க முடியாது. அதேபோல் தனிமனித ஒழுக்கத்தில் தமிழனை மிஞ்ச யாரும் இல்லை.

பெண்களுக்கென தனி மதிப்பை கொடுத்து வந்ததில் தமிழனை விட யாரும் உண்டா என்ன?, தாய் மீது, தங்கை மீது, தங்கையின் மகள் மீது, தாரத்தின் மீது, தன மகள் மீது தமிழனாய் பிறந்த ஆன் காட்டும் பாசத்திற்கு இந்த உலகமே, என் மகன், என் அண்ணன், என் தந்தை, என் தாய்மாமன், என் கணவன் தான் என்று நம் தமிழச்சிகளும் கொண்டாடிய காலம் அது.

ஆனால், இன்று செய்தி தாளை திறந்து பார்த்தால், கற்பழிப்பு, கள்ள காதல் என்று தமிழ் சமூகம் பாதை மாரி போகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. அன்பாலும், காதலாலும், ஈர்க்கப்பட்ட இரு உயிர்கள் சேரும் அந்த தருணத்தை எப்படி இந்த தமிழ் சமூகம் அதனை ஒரு இச்சையாக மாற்றியது என்ற கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் உள்ளது.

அதில் சில, வெள்ளித்திரை, சின்னத்திரை, அந்நிய கலாசாரம், அந்நிய உணவு, ஆடம்பர மோகம், தற்போதைய நவீன கைபேசி, கல்வி முறை என்று கடந்த 25 வருடங்களில் நாம் மீது நிறைய திணிக்கப்பட்டுள்ளது. இன்று நம்மில் பலர் நம் சுயத்தை இழந்து நடிகர்களின், நடிகைகளின் வாழ்க்கையை வாழ ஆசைப்படுவதும், பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு காரனின் வாழ்க்கையை வாழ நினைத்து கொண்டு. உண்மையான அன்பை தொலைத்துவிட்டு பாதை மாரி எங்கோ தேடி கொண்டிருக்கிறோம்.

இதனை பற்றி பேசினால் உங்களின் அவசர வாழ்க்கையில், நேரம் போதாமை வேறு உள்ளது. நாம் தலைப்பிற்கு வருவோம், வயது ஆக ஆக, தாம்பத்தியத்தில் பாதிப்பு ஏற்படுமா? நம்மில் பலரின் சந்தேகத்திற்கு இதோ பதில்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நமக்கு மொண்டு வேலை பசி எடுப்பது போல் அதுவும் ஒன்று தான். பசிக்கு உணவு தேவை, தாம்பத்தியத்திற்கு நிறைய அன்பும், காதலும் தேவை, அதும் தன கணவன்/மனைவி மட்டுமிடமே (அதாவது ஒருவனுக்கு ஒருத்தி) இருந்தால் போதும். இதனையே பல ஆராய்ச்சிகளும் நமக்கு உணர்த்துகின்றன.

பொதுவாக, ஆண்கள் 25 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொள்வது ஆரோக்கியம், ஆனால், நாம் வாழும் தற்போதைய சூழ்நிலையில், 30 வயது தான் ஆணின் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலாவது ஆண்கள் 25 வயதுக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும். 

ஆய்வின்படி இந்த வயதில் அதிக வேகம் இருக்கும், ஆனால் 35 - 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த 35 - 40  வயதில் தான் தாம்பத்திய சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் கூறியுள்ளார்கள்.

தாம்பத்தியத்தில் ஆண்களை பொறுத்தவரை..

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

தாம்பத்தியத்தில் பெண்களை பொறுத்தவரை..

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக தாம்பத்தியம் கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்த வேண்டும்.

ஒரு உண்மையை மறவாதீர்கள்.. தாம்பத்தியம் பற்றி நாம் திகமாகவே தவறான கருத்துக்களையே தெரிந்து கொண்டுள்ளோம். உண்மையில் தாம்பத்தியம் என்பது ஒரு புனிதமான செயல். இரு உடல், அன்பால் பிணைக்கப்பட்டு, ஒரு உயிர் ஆகி,  ஒரு உயிரை ஈன்றெடுக்கும் நிகழ்வு தான் தாம்பத்தியம். தனிமனித ஒழுக்கமே.. நாளைய தலைமுறையை வழிநடத்தும், முறையற்ற காதல், உறவு, அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை கேள்வி குறிக்கும் என்பதை உணர்ந்து தனி மனித ஒழுக்கத்தை பேணி காப்போம். 
 

English Summary

LOVE MORE AND MORE


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal