உண்மையில் காமம் என்பது என்ன? சாஸ்திரம் சொல்லும் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும் காம உணர்வு என்பது இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று தான். இதனை யாரும் சொல்லித்தர தேவையில்லை என்றும்,  விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? என்றும் அலட்சியமாக நீங்கள் கேட்பது புரிகிறது. .

முதலில் காமம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் அளப்பரியது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் சர்வ சாதாரணமாகும்.

வயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல் பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை என்று விலங்குகள் போல் இருந்து விட கூடாது. இதற்க்கு இரு மனம் ஒன்று கூடி இணையும் பொது மட்டுமே இன்பம் என்பது உச்சத்தை அடையும். இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.

விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்லா காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love define


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->