சமைக்கலன்னு கொலை பண்ணல.. இது தான் காரணம்.! - வழக்கில் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கு, இலக்கியா என்ற மனைவி இருக்கின்றார். ஜெயராஜ் கார் ஓட்டுனராகவும், இலக்கியா மால் ஒன்றில் செக்யுரிட்டியாகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி இலக்கியா வீட்டில் சடலமாக தொங்கியுள்ளார்.

அப்பொழுது இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே இலக்கியா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

இதுகுறித்து இலக்கியாவின் கணவரிடம் விசாரித்த பொழுது நான் எப்படி என்னுடைய காதல் மனைவியை கொலை செய்வேன் என்று நாடகமாட, பின்னர் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட வேறுவழியில்லாமல் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

எப்பொழுதும் ஹோட்டலில் தான் சாப்பாடு, என் மனைவி வேலைக்கு செல்வதால் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவாள். அவளுக்கு என்று விடுமுறையோ அன்று மட்டும் வீட்டில் சமைப்பாள். ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை. எனவே என்னுடைய அம்மாவை அழைத்து வர முடிவு செய்தேன்.

ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், இலக்கியா என்னுடைய தாயை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதன் காரணமாக நான் ஆத்திரமடைந்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband says why i m murdered my wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->