ஒரே பெண்ணை திருமணம் செய்த சகோதரர்கள்! அதுவும் இந்தியாவில்... இதோடு இது ஐந்தாவது திருமணம்!
himachal brother marry one woman
இமாசலப் பிரதேசம்: சிர்மெளர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில், ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரதீப் மற்றும் கபீல் நேகி ஒரே பெண்ணான சுனிதா சௌஹானை திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண்ணின் முழு சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம், அந்த சமூகத்தின் பாரம்பரிய வழிக்காட்டுதலின்படி கோலாகலமாக நடைபெற்றது.
கிராம மக்கள் முன்னிலையில் இசையுடன் நடைபெற்ற திருமண விழாவின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் அந்த பகுதியில் நடைபெறும் ஐந்தாவது திருமணம் இதுவாகும். ஹட்டி சமூகத்தில், ஒரு பெண் இரண்டு சகோதரர்களை திருமணம் செய்வது பாரம்பரிய வழக்காக இருந்து வருகிறது.
இது நிலம், சொத்து பிரிவைத் தவிர்த்து குடும்ப ஒற்றுமையை நிலைநிறுத்தும் முறையாகப் பார்க்கப்படுகிறது. கல்வி, பொருளாதார முன்னேற்றம் காரணமாக இந்த நடைமுறை தற்போது குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மணமகன் பிரதீப் அரசு ஊழியர்; அவரது சகோதரர் கபீல் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இருவரும், “இது எங்களின் சுய முடிவு; யாருடைய அழுத்தமும் இல்லை. ஒரே குடும்பமாக எங்கள் மனைவிக்கு முழு அன்பும் ஆதரவும் வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
himachal brother marry one woman