பெண்ணின் திருமணத்தன்று தந்தை தற்கொலை .! வெளியான காரணத்தால் வாய்பிளந்த உறவினர்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவருக்கு மீது என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, இன்று நீதூக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

மணப்பெண்ணை, உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர், சிறிது நேரத்தில் சிவபிரசாத் மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளார். வெகுநேரமாகியும், அவர் மண்டபத்திற்கு திரும்பவில்லை. உறவினர்கள் அனைவரும் அவரை தேடி அங்குமிங்கும் அலைந்து உள்ளனர்.

இந்நிலையில், சிவபிரசாத் தனது வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தெரியவந்ததும் உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பெண்ணிற்கு தெரியாமல் திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு திருமணமும் நடந்தேறியது.

ஆனால், முன்னதாகவே அவருக்கு இந்த விபரம் தெரிந்து விட்டது. திருமணம் முடிந்த பின்னர் சிவபிராசாத்திற்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் தொல்லை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. 

English Summary

father suicide in daughter marriage


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal