திருமணமான 5 மாதங்களிலேயே காதல் ஜோடிக்குள் இப்படியொரு பிரச்சினையா? ஆத்திரமடைந்த மாமானாரால் நேர்ந்த கொடூரம்!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே அப்பராசபுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் . இவரது மகள் கலைமதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கலைமணி தலைச்சங்காடு பகுதியில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சண்டை அதிகமான நிலையில் கலைமதியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆனநிலையில் இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தும்படி அறிவுறுத்தி போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து கலைமதி அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் நேற்று மதியம் உறவினர் ஒருவரை சந்திக்க கலைமதி ஊருக்கு வந்த சதீஷ்குமார் அவரது தந்தை நாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது தனது மனைவியை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் சதீஷை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

 இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

father in law killed son in law


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal