கள்ள காதலுக்காக பெற்ற தாயை கொளுத்திய பெண் அரசியல்வாதி!! மீண்டும் ஒரு அபிராமி?! - Seithipunal
Seithipunal


தம்பரம் சானடோரியம் துர்கா நகரில் வசித்து வரும், நந்தினி என்பவர் ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் திருமணமாகி அதே தெருவில் வசிக்கின்றார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அவரது தாய் பூபதி கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 7 ம் தேதி பூபதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, தகராறு ஏற்பட்டு முடிந்த பின்னர், பூபதியின் கண்டிப்பால் கள்ளக்காதலனுடன் சேர முடியாமல் போகும் என நினைத்து தனது தாயை கொல்ல முடிவு செய்துள்ளார்.

எனவே, தேய் தெருவில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று திட்டமிட்ட நந்தினி,  வழக்கமாக காலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு பூபதி தூங்குவது வழக்கம். எனவே அப்போது அவரை கொளுத்தி விடலாம் என எண்ணிய நந்தினி சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு பூபதி உறங்குவதை பார்த்த நந்தினி அவரை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு தனது வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின் பூபதி அலறி அடித்துக்கொண்டு தீயோடு ஓடிவர அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அன்று மாலை சிகிச்சை பலனின்றி பூபதி உயிரிழந்த்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக அவர் தீக்குளித்தார் என மக்கள் சந்தேக பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் நந்தினி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நந்தினியை வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

English Summary

a women killed her mother for illegal relationship


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal