மனைவியை கொன்று பிரிட்ஜில் வைத்து கள்ளகாதலியுடன் உல்லாசம்.! இறுதியில் கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஜு என்பவர் துணி கடையில் பணியாற்றி வருபவர், தொடக்கப் பள்ளி ஆசிரியையான தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 2014 ம் தேதி, கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால் மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் ஜூ கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவியின் உடலை பாதுகாக்க புதிய ப்ரீசர் ஒன்றை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

dead body in freezer, seithipunal

அது குறித்து விவரம் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அவருடைய பாம்புகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு இறைச்சி சேமித்து வைப்பதற்காக அதனை வாங்கியதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரது மனைவியை யாரும் பார்க்காத வண்ணம் பால்கனியில் உடலை வைத்து பிரீசரில் போட்டு கிட்டத்தட்ட 106 நாட்கள் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு அவரது மனைவியின் சமூக வலைதள கணக்குகளில் நுழைந்து அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி செய்து பதில் அளித்து வந்திருக்கின்றார். மேலும், இதனை மறைப்பதற்காக அவர் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மனைவியின் கிரெடிட் கார்டுகளை கொண்டு ஆடம்பரப் பொருட்கள், அன்றாட செலவுகள் என செலவழித்துள்ளார்.

credit card, seithipunal

அவரது மனைவியின் அடையாள அட்டையை வைத்து மற்றொரு பெண்ணுடன் ஹோட்டல் அறைக்கு சென்றதால் விஷயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பின்னர் அவர் மனைவியின் கிரெடிட் கார்டில் இருந்து எக்கச்சக்கமாய் பணத்தை எடுத்து மற்றொரு பெண்ணுடன் பயணம் செய்வதை மேற்கொண்டுள்ளார். 

பின்னர், மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்கு இருவரையும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைத்துள்ளனர். அப்பொழுது செய்வதறியாது திகைத்த ஜூ போலீசில் சரணடைந்துள்ளார். அவருக்கு மரண தண்டனை விதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man killed her wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->