அன்புமணி MP-க்கு பகிரங்க மிரட்டல் விட்ட இளைஞர்! போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தில் இருந்தா எங்க ஏரியால காலை வை பாக்கலாம் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் MP-க்கு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சில நாட்கள் முன்பு சர்க்கார் பட பேனர் விவகாரத்தில், விஜய் ரசிகர்கள் 2 பேர் அருவாள் உடன் பேசி வீடியோ வெளியிட்டார்கள். அவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 23 ம் தேதி டிக்-டாக் என்ற ஆப் மூலம் சர்ச்சைக்குரிய மற்றொரு வீடியோ வெளியானது. அதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பற்றி அந்த டிக்டாக் ஆப்பில் ஒரு இளைஞர் அவதூறாக பேசி பதிவு செய்து இருந்தார்.

இந்த இளைஞர் அவதூறாக பேசி 3 வீடியோக்கள் அதில் பதிவு செய்துள்ளார். இந்த இளைஞர் பெயர் வினோத் (வயது19) ஆகிறது. இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். அதே பகுதியில் கூலி வேலையும் செய்து வருகிறார்.

இது பாமக தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. அவதூறாக பேசிய வினோத் என்பவரின் இணையதள முகவரியை கண்டறிந்த பாமகவினர், இளைஞர் குறித்த பல விவரங்களை திரட்டி, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு காவல் துறையினர், வினோத் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

English Summary

young man arrested is murder threatened anbumani


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal