முதல்வராக பதவி ஏற்ற பின்பும் நிம்மதியை தொலைத்த எடியூரப்பா!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி செய்துவந்த குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர், 105 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். 

புதிதாக பதவியேற்ற எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்றது, பெருபான்மைக்கு 104 வாக்குகள் தேவையான நிலையில், எடியூரப்பா தலைமைலான பாஜகவிடம் 105 எம்.எல்.ஏக்கள் இருந்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் 105 வாக்குகளை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடித்த எடியூரப்பா, தமது மந்திரி சபையை இன்னும் சில தினங்களில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். இதற்ககாக, வரும் 6 ஆம் தேதி, டெல்லி செல்லும் எடியூரப்பா, பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தது. மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, கர்நாடக மந்திரி சபை பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியை பிடிக்க, மூத்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. 

கர்நாடக பாஜகவில் ஏராளமானோர் அமைச்சர் பதவி வேண்டும் என கேட்பதால். பாஜக காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிலிருந்து வந்தவர்களுடன் சேர்த்து சுமார் 60 பேர் அமைச்சர் பதவி கேட்கிறார்கள். அனைவரும் அமைச்சர் பதவி கேட்பதால், என்ன செய்வது என தெரியாமல் எடியூரப்பா தவிக்கிறார்.  வரும்  6 ஆம் தேதி அமைச்சர்கள் பட்டியலுடன் டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் மேலிட தலைவர்களுடன் கலந்தாலோசித்து பிறகே அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

ஜாதி வாரியாகவும், பிராந்தியம் வாரியாகவும் மந்திரி பதவி கொடுக்க வேண்டிய நிலையும் தற்போது உள்ளது. லிங்காயத், ஒக்காலிக்கா சமூகத்தினர் அதிக அளவில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். மேலும் அந்த சமூகத்திலே யாருக்குஅமைச்சர் பதவி கொடுப்பது தெரியாமல் எடியூரப்பா செய்வதறியாமல் திகைத்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yeadiyorappa got confused to elect ministers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->