அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பணம் கேட்டு மிரட்டல்.! முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தன்னிடம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி கேட்டு மிரட்டுகிறார்கள் என்று, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் பணி தொடங்கியுள்ளது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறக்கட்டளையின் மூலம் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இந்த அறக்கட்டளை நிதி வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், தன்னிடம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி கேட்டு மிரட்டுகிறார்கள் என்று, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, 'ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி கேட்டு மக்களை மிரட்டப்படுகிறார்கள். ஒரு பெண் உட்பட மூன்று பேர் என் வீட்டிற்கு வந்து ராமர் கோவிலுக்கு நான் ஏன் நிதி கொடுக்கவில்லை என்று என்னை கேட்டு மிரட்டியுள்ளனர்.

நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை இது. ராமர் கோயில் கட்டுவோம் என்ற பெயரில் மற்றவர்களை பயமுறுத்தி பணம் வசூல் செய்கின்றனர். இந்த வசூல் செய்யப்படும் பணம் குறித்த வெளிப்படைத்தன்மையும் இல்லை" என்று முதலமைச்சர் குமாரசாமி அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

XC CM KUMARASAMI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->