உலகின் வயதான மாணவி பாகீரதி அம்மா இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.! - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த, உலகின் வயதான மாணவி பாகீரதி அம்மா இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

கேரள மாநிலம், கொல்லம் நகரத்தை சேர்ந்தவர் பாகீரதி அம்மா. இவருக்கு 107 வயது ஆன போதிலும், இவர் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். மேலும், கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், படித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான்காம் வகுப்புக்கு நிகரான தேர்வில் பாகீரதி அம்மா 75% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மான் கி பாத் நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு தெரிவித்து புகழாரம் சூட்டினார்.

பாகீரதி அம்மாவுக்கு அவரின் தோழியான ஷெர்லின் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள சாரதாவும் தொடர்ந்து கல்வி கற்பித்து வருகின்றனர். மேலும், 107 வயதிலும் கல்வி கற்கும் பாகீரதி அம்மாவின் ஆர்வத்துக்கு உறுதுணையாக, அவரின் மகள் தங்கமணி பிள்ளையும், அந்த பகுதியை சேர்ந்த மக்களும் துணையாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே பாகீரதி அம்மாவின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியது. இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இரண்டு கனவுகள் நிறைவேறாமலேயே பாகீரதி அம்மா உயிர் இழந்துள்ளார்.

அவரின் இரண்டு கனவுகள் ஒன்று, ஏழாம் வகுப்புக்கு நிகரான தேர்வில் வெற்றி பெற்று, 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுத வேண்டும் என்பதும். இரண்டாவது கனவாக, நடிகர் சுரேஷ் கோபியுடன் நேரில் சந்தித்து பேசுவதை அவர் தனது கனவாகக் கொண்டிருந்தார். அந்த இரண்டு கனவுகளும் நிறைவேறும் முன்னரே அவர் உயிர் பிரிந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world oldest student die


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->