அதிமுக ஆட்சியை தக்கவைக்க யார் காரணம்?.! வெளியான பரபரப்பு தகவல்கள்.!!  - Seithipunal
Seithipunal


ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும்., இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் என்று மூன்று அணிகளாக பிரிந்தனர். இதற்கு பின்னர் நடந்த அரசியல் மாற்றத்தினை அடுத்து ஓபிஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஒன்று சேர்த்து., அதிமுக தலைமையிலான ஆட்சியை கைப்பற்றி நடத்தி வந்தனர். டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். 

தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்., தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தேனி தொகுதியில் மட்டும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாராளுமன்ற தேர்தலின் போதே நடைபெற்ற 22 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களையும்., அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. 

அதிமுக கைப்பற்றிய 9 தொகுதிகளில் பாமக செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் உள்ள சோளிங்கர், அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது. வட மாவட்டங்களில் இருக்கும் பாமக ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுகவுக்கு விழுந்துள்ளன. இதனைப்போன்று புதிய தமிழகம் கட்சி செல்வாக்குக்காக இருக்கும் நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சாத்தூர், மானாமதுரை ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

தேர்தல் சமயத்தில் அதிமுக செல்வாக்காக இருந்து வந்த தென்மாவட்டத்தில் அமமுகவிற்கு தற்போது செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில்., அதிமுகவை ஆதரித்து வந்த சமுதாயவாக்குகள் அமமுகவிற்கு இந்த தேர்தலின் பொது சென்றது. இதனால் அதிமுக தோல்வியடைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்த தருணத்தில்., புதியதமிழகம் கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து., தேவேந்திர சமுதாய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியை முதல்வரும் அளித்து பிரச்சாரம் செய்து வந்தார். 

இதனையடுத்து புதியதமிழகம் கட்சிக்கான வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு செலுத்தப்பட்டு அதிமுக 8 இடங்களை கைப்பற்றியது. சூலூரை பொறுத்த வரையில் மறைந்த எம் எல் ஏ கனகராஜின் அனுதாபத்தை வைத்து அமோக வெற்றியை பெற்றாலும்., வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகளை வைத்தே அதிமுக 8 தொகுதிகளை கைப்பற்றி வெற்றியடைந்தது. இதன் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி தனக்கென வாக்கு வங்கியை வைத்திருப்பதும்., இந்த தேர்தல்களில் இது அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது திமுகவிற்கு மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is help to admk to standby tn govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->