மோடியின் கையில் இருந்த கருவி இது தானாம்.! பிரதமர் டிவிட்.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. கலைநிகழ்ச்சிகள் உயர்தர விருந்துகள் என இனிதே இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்று முடிந்தது.

கோவளம் அருகே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி அதிகாலையில் கடற்கரைப்பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கே கடற்கரை ஓரம் ஒதுங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை தன்னுடைய கைகளால் அள்ளி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், ஆதரவுகளும் குவிந்தன. அன்று பிரதமர் மோடி தன்னுடைய கையில் கருவி ஒன்றை வைத்திருந்தார். அது என்ன கருவி எனப் பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் அந்த கேள்விக்கு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில், "மகாபலிபுரம் கடற்கரையில் பயிற்சி மேற்கொண்ட பொழுது என்னுடைய கையில் வைத்திருந்த அந்த கருவியை என்ன என்பது குறித்து அனைவரும் கேள்வி எழுப்பினர். அது ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும் அக்குபிரஷர் ரோலர் கருவி. நான் அதை அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். மிகவும் எனக்கு உதவியாக இருக்கும்." என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which is in modi hand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->