முதலமைச்சரை சீமான் இன்று மாலை சந்தித்ததன் காரணம் என்ன? உள்நோக்கம் ஏதேனும் உள்ளதா? - Seithipunal
Seithipunal


இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சீமான்' நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் வீட்டில் நடைபெற்றது.

மேலும், இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் வருத்தம் கலந்த ஆறுதல் தெரிவித்தார்.

சீமான்:

இதனைத்தொடர்ந்து, நிருபர்களுக்கு சீமான் பேட்டியளித்ததில் தெரிவித்ததாவது,"அரசியலுக்கு அப்பால் இதுபோன்ற தருணங்களில் நடந்து கொள்வதுதான் நாகரிகம்.

கட்சி முரண்பாடுகளை கடந்து இத்தகைய தருணங்களில் தலைவர்கள் நடந்து கொள்வது இயல்புதான்.நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்"  என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What reason Seeman meeting Chief Minister this evening Is there any ulterior motive


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->