மம்தா அமைச்சரவையின் அமைச்சர் அதிரடியாக கைது.! கட்டு காட்டாக பணம்., அதிர்ச்சி வீடியோ.! 100 கோடியில் 20 கோடி.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநில மம்தா அமைச்சரவையின் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்மாநில அரசின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் புகார் தொடர்பான வழக்கில். தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு மம்தா தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு ஒன்றை நடத்தியது. 

இந்த தேர்வின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கியது.

இந்நிலையில், நேற்றைய தினம் இவ்வழக்கு குறித்து 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Industries Minister Partha Chatterjee arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->