மம்தாவுக்கு எதிர்ப்பு., குடியரசு தலைவர் தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான முயற்சி ஒற்றுமையை பாதிக்கும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் டெல்லியில் அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"மம்தா பேனர்ஜி எனக்கும் கடிதம் அனுப்பி இருப்பதாக நான் சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் ஆலோசனை செய்து, பின்னர் நேரம், தேதி ஆகியவை தீர்மானிக்கப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே தலைநகர் டெல்லியில் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஆனால், மம்தா பானர்ஜியின் கடிதமானது ஒருதலைப்பட்சமாக அனுப்பப்பட்டுள்ளது. இது வழக்கத்துக்கு மாறாக உள்ளது. நாட்டிலுள்ள எதிர்க் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் ஒன்று சேர வேண்டும் என்பதே நமது நோக்கம். ஆனால் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான முயற்சி ஒற்றுமையை பாதிக்கும்" என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Chief Minister Mamata Banerjee unilateral attempt to undermine unity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->