எடியூரப்பா அரசு மீது சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை சரிந்து. இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

16 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இருந்தபோதிலும் பலனில்லை. கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று அமித்ஷாவை சந்திக்கிறார் தொல் திருமாவளவன்.. காரணம் இதுதான்.!

மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி செய்துவந்த குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர், 105 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. 

ராஜினாமா கடிதம் கொடுத்த 14 சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14  சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் இதுவரை 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் தற்போது கர்நாடக சட்டப்பேரவை பலம் 208ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 105 உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளதால், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசுக்கு பிரச்சனை ஏற்படாது என்று கருதப்படுகிறது. 

தமிழகத்தில் அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்ற, அதிமுக என்ன குமாரசாமியா? அதிமுக அமைச்சர்.!!

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை கூடியது. எடியூரப்பா அரசு மீது சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறயுள்ளது. நான் விவசாயிகளின் நண்பன், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று பேரவையில் எடியூரப்பா பேசினார். அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் என்று எடியூரப்பா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote of confidence in yediyurappa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->