சட்டசமையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு... சபாநாயகர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும் காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.

ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது.

கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ, சுயேச்சை, KPJP மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் 119 இடங்களை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் வைத்திருந்தது.  

அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

கர்நாடக சட்டசமையில் 18 ஆம் தேதி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் மனம் மாறி அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வருவார்களா என்ற கேள்வி குறியாக உள்ளது.

மேலும், கர்நாடக சட்டப்பேரவை வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் அவையை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote of confidence in karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->