ரஜினிக்கு டிமிக்கி கொடுத்து பாஜகவில் இணைந்த பிரபலம்.! கட்சியில் இணைந்தற்கான காரணம் குறித்து விளக்கம்.! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் மற்றும் தமிழக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி K.அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை ஐபிஎஸ் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அண்ணாமலை ஐபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறப்பட்ட நிலையில் அவர் ரஜினிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பாஜகவில் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.

இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், தெற்கு பெங்களூரு துணை ஆணையராக இருந்தபோது அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர் என்ற பெருமை பெற்ற இவரை "கர்நாடக சிங்கம் போலீஸ்"  என அந்த மாநில மக்களால் அழைக்கப்பட்டாராம்.

சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாக தனது பதவியை ராஜினாமா செய்த போது அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

voluntary retirement annamalai ips joied in bjp party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->