ஸ்டாலினை சந்தித்ததற்கான காரணத்தை வெளியிட்ட விஷால்?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி  37 இடங்களை  கைப்பற்றியது. மேலும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளர்  விஷால் நேற்றிரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தனிப்பட்ட முறையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், இதில் அரசியல் ஏதும் இல்லை என கூறினார். 

மேலும், மக்களுக்கு சமூக சேவை செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என கூறிய விஷால், தாமும் சமூக சேவையை தொடர்ந்து செய்து வருவதாகவும், ஏற்கனவே அரசியலுக்கும் தான் வந்துவிட்டதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal meet mkstalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->