பெரும் சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்.! பிரேமலதா விஜயகாந்த் பெற்ற வாக்குகள் எவ்வளவு? முன்னணி நிலவரம்.! - Seithipunal
Seithipunal


விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 140 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 25,323 வாக்குகளும், பாமக வேட்பாளர் 19,533 வாக்குகளும் பெற்றனர். பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்னும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthachalam counting 2 pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->