#Breaking || விருத்தாச்சலம் செல்வமுருகன் மரண வழக்கில்., காவல்துறை சொன்ன விளக்கம்.! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, அதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி புகார் அளித்தார்.

மேலும் செல்வமுருகன் படுகொலைக்குக் காரணமான காவலர்களைக், கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, கணவர் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிய கோரி செல்வமுருகன் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், விருத்தாச்சலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் "செல்வமுருகம் உடலில் எந்த காயமும் இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்து உள்ளனர். இது சிறையில் நடந்த மரணமும் இல்லை. அவருக்கு வலிப்பு வந்து கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சம்மந்தமாக மேலும் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும்" என்று காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வரும் 18ம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
#HighCourt | #Virudhachalam


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhachalam selvamurugan death case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->