மக்களை பாதுகாக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.  இதனால் குடிநீர் மாசுடைந்து குடிக்க லாயக்கற்ற நிலையில் இருக்கிறது.

 குடிநீரால் பல்வேறு நோய் தொற்றுகள் பொதுக்களுக்கு தற்போது பரவி வருகிறது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி,  மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மழைக்காலம் என்பதால் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் பெருகுவதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் பரவி வருகிறது. எனவே பருவ மழை காலத்தில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சமையலுக்கு சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.  நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth statement for heavy rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->