விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை.! வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை பொதுமக்களுக்காக அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டு அத்திவாரத்தாரை தரிசித்து வருகின்றனர். இதனால், கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவிற்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் திணறுகின்றனர். 

athivarathar, seithipunal

இந்நிலையில், அதிர்வரதரை தரிசிக்க முடியாமல் மக்கள் அன்றாடம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதனால், தரிசன நேரத்தை அதிகரிக்க கூறி, விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், அத்திவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, காண வரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும், பாதுகாப்பும் தமிழக அரசாங்கம் செய்திட வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள், எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்திடவேண்டும்'' என அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about athivaradhar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->