'நானும், என் மனைவியும் அன்றே சொன்னோம்' - உற்சாகத்தில் விஜயகாந்த்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். சமீபத்தில் சீன மற்றும் இந்திய ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அரசு 59 சீன செயல்களுக்கு தடை விதித்தது. 

இந்தியாவில் அதிகப்படியான உபயோகித்து வந்த டிக் டாக் மற்றும் ஹலோ உள்ளிட்ட செயலிகளும் இதில் அடங்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கக்கூடிய டிக்டாக், ஷேரிட், ஹலோ, உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது வரவேற்க்க தக்க ஒன்று.

இந்த டிக்- டாக் போன்ற செயலியால் எத்தனையோ லட்சக்கணக்கான பெண்களும், குடும்பங்களும் சீரழிந்து வருவதாகவும், குறிப்பாக இந்த செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டாம் என நானும் எனது மனைவியும் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

இந்தியா - சீன எல்லையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சில நாட்களாகவே சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கவேண்டும். சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீன நாட்டிற்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about 59 apps ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->